Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காஷ்மீரி தம் ஆலு…இப்படி செய்து பாருங்க…ருசி அள்ளும்….!!

தம் ஆலு செய்ய தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு          – அரை கிலோ
பெரிய வெங்காயம்     – 1
தக்காளி                              – 3
தயிர்                                     – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது                  – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்                       – கால் டீஸ்பூன்
எண்ணெய்                        – தேவைக்கேற்ப
உப்பு                                      – தேவைக்கேற்ப
இஞ்சி                                    – ஒரு துண்டு

பொடிக்க தேவையானவை :

காய்ந்த மிளகாய்     – 4
தனியா                           – 2 டீஸ்பூன்
சீரகம்                              – ஒரு டீஸ்பூன்
பட்டை                            – ஒன்று
ஏலக்காய்                      – ஒன்று

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேகவைத்து எடுக்கவும். அதை தோல் உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய உருளை துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் காயந்ததும், அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று , தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்,மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளையும், பொடித்து வைத்ததையும் சேர்த்து வதக்கவும்.

இறுதியில் தேவையான அளவு உப்பு மற்றும் 2 டேபில்ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். அருமையான சுவையுடைய தம் ஆலு ரெசிபி ரெடி.

Categories

Tech |