Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காஷ்மீரி ஸ்டைல்…காராமணி மசாலா ரெசிபி…!!

காராமணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்: 

காராமணி                        – ஒரு கப்
வெங்காயம்                     – ஒன்று
உருளைக்கிழங்கு         – 1
தக்காளி                             – 1 நறுக்கியது
உப்பு, எண்ணெய்          –  தேவைக்கேற்ப
காஷ்மீர் சில்லி தூள்     – அரை டீஸ்பூன்
தனியா தூள்                     – அரை டீஸ்பூன்
இஞ்சிப்பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

அரைக்க தேவையானவை:

தேங்காய் துருவல்          – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம்                                    – ஒரு டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்             – இரண்டு
கசகசா                                 – ஒரு டீஸ்பூன்

தாளிக்க தேவையானவை:

பட்டை                                – ஒரு துண்டு
கிராம்பு                              – 2
சோம்பு                               – 1 டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு வாணலியில் காராமணியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீரில் வேகவைத்து, வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.

மிக்ஸிஜாரை எடுத்து அதில் தேங்காய் துருவல், சீரகம், சிவப்பு மிளகாய், கசகசா என அனைத்தையும் எண்ணெயில் லேசாக வறுத்தப்பின் விழுது போல அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனை தொடர்ந்து இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, வேக வைத்த காராமணியையும் சேர்த்து, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

பின்பு அவற்றுடன் தனியாத்தூள், காஷ்மீரி சில்லி பொடி, அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவும். இப்போது சுவையான காராமணி மசாலா ரெடி.

Categories

Tech |