Categories
தேசிய செய்திகள்

காஷ்மீருக்குள் நுழைவார்களா தலிபான்கள்?… “தயாராகும் மத்திய அரசு”… பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை..!!

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆப்கான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இல்லத்தில் ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தற்போது தலிபான்களின் ஆதிக்கத்தில் வந்துள்ளது. இறுதியாக எஞ்சியிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தலிபான்கள் கைப்பற்றியதாக அறிவித்தனர்.. அத்துடன் ஆப்கானில் புதிய அரசு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்..

இதன் காரணமாக பாகிஸ்தான் உளவுத் துறையினர், தீவிரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தானில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்து காஷ்மீர் பகுதியில் பிரச்சினைகளை ஏற்படுத்துவர்களா.. மீண்டும் ஊடுருவல் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இதனால் இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தாலிபான் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அடுத்த கட்டமாக காஷ்மீரையும் நாங்கள் சுதந்திரம் அடையச் செய்வோம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. இவர்கள் காஷ்மீரில் ஊடுருவல் செய்து  நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என்றும், அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.

 

Categories

Tech |