சென்ற 22 ஆம் தேதி காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த இரு தற்கொலைப் படை தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்தனர். இதையடுத்து சட்டவிரோதமான சுரங்கப் பாதைகள் வாயிலாக அவர்கள் ஊடுருவி இருக்ககூடும் என கணித்த அதிகாரிகள் எல்லையில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில் சம்பாவில் சிறியளவில் நிலத்தடியில் இருந்த பள்ளம் ஒன்று சுரங்கப்பாதையாக சென்றது கண்டறியப்பட்டது. இந்திய எல்லையிலருந்து 900 மீட்டர் தொலைவிலும், பாகிஸ்தானின் எல்லை கோட்டில் இருந்து 150 மீட்டர் இடை வெளியிலும் சுரங்கப்பாதை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.