Categories
உலக செய்திகள்

‘காஷ்மீர் எங்களுக்கும் முக்கியம்தான்’ – பகீர் கிளப்பிய துருக்கி அதிபர்

காஷ்மீர் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு முக்கியமோ, அதே அளவு துருக்கிக்கும் முக்கியமே என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டோகன், “காஷ்மீர் பிரச்னையை மோதலாலோ, ஒடுக்குமுறையாலோ தீர்க்க முடியாது. நீதி, நியாயத்தால் தான் அது சாத்தியமாகும். பாகிஸ்தான் மக்கள் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு முக்கியமோ, அதே அளவு துருக்கிக்கும் முக்கியம்.

வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக, துருக்கி மேற்கொண்டு வரும் ‘ஆப்ரேஷன் அமைதி வசந்தத்துக்கு’ ஆதரவாக நிலைப்பாடு எடுத்த பாகிஸ்தானை பாராட்டுகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்குத் துருக்கி தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்க நடவடிக்கையைக் கண்டித்து நாடுகளுள் துருக்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |