Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்… ஆயுதங்களை குவித்துள்ள பாகிஸ்தான்…!!!

காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதியில் மோதலை தீவிரபடுத்த பாகிஸ்தான் அதிக அளவு வான்வெளி வாகனங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் மோதலை மேலும் தீவிரமாக்க மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானின் ஆளில்லா வான்வெளி வாகனங்களை நிறுத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதற்காக பாகிஸ்தான் சீனாவிலிருந்து காய்ஹாங்-4 யுஏவியை அதிக எண்ணிக்கையில் வாங்கியிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. பிரிகேடியர் முகமது ஜாபர் இக்பால் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவத்தின் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு இதற்காக சீனாவுக்கு சென்று கொள்முதல் செயல்முறையை ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காய் ஹாங்-4ன் முதல் தொழிற்சாலை சோதனைக்காக இக்பால் இதற்கு முன்னதாகவே கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிற்கு பயணம் செய்துள்ளார்.

யுஏவி ஏற்கனவே ஈராக் ராணுவம் மற்றும் ராயல் ஜோர்டானின் விமானப் படை உள்ளிட்ட ராணுவப் படைகளில் சேவையில் இருந்து கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் ராணுவ சிறப்பு சேவை குழு கமாண்டோக்கள் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் ரகசிய இடங்களில் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. அந்த பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரோந்து செல்லும் ராணுவம் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |