Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிங் கோலியை பின்தள்ளிய ரோஹித் ..! புதிய சாதனை படைத்து அசத்தல்…!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 14பந்தில் 24ரன்னிலும், இஷான் கிஷன் 10 பந்தில் 8 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி, விராட் கோலின் சாதனையை தகர்த்துள்ளார். 20ஓவர் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய வீரர்களின் வரிசையில் ரோஹித் சர்மா இன்று 2ஆவது இடத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

முன்னதாக பாக்கிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 26போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 30 போட்டிகளில் 1000 ரன்னை எட்டி இருந்தார். தற்போது ரோஹித் சர்மா 29போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Categories

Tech |