Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“கிங் ரிச்சர்ட்” படத்தில் நடித்த “வில் ஸ்மித்”… சிறந்த நடிகருக்கான “ஆஸ்கார் விருது”…!!!

கிங்  ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிங் ரிச்சர்ட் திரைப்படமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் ரெனால்டோ மார்க்கஸ் கிரீன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான வில் ஸ்மித் நடித்துள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் இவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம்தான் கிங் ரிச்சர்ட் . இந்தப்படமானது வில்லியம்ஸ் சகோதரிகளை சாதனையாளர்களாக மாற்ற அவரின் தந்தை பாடுபட்டதை கதைக்களமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த வில் ஸ்மித்-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |