சென்ற 1998 ஆம் வருடம் முதல் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கிசான் கிரெடிட்கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து கிசான் கிரெடிட் கார்டுகளின் வாயிலாக உத்தரவாதம் இல்லா கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரூ.3 லட்சம் வரையிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. ஆனால் 1 லட்சத்திற்கு மேலாக கடன்களைப் பெறுவோருக்கு நிலப் பத்திரம் போன்றவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் வாயிலாக பெறப்படக்கூடிய கடன்களுக்கு 7% வட்டியை செலுத்தவேண்டி இருக்கும். ஆனால் உரிய நேரத்தில் கடனை செலுத்துவோருக்கு 3 % வட்டி சலுகை வழங்கப்படுவதால் 4 % வட்டி மட்டுமே செலுத்த நேரிடும்.
கிசான் கிரெடிட்கார்டு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..?
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், குத்தகை விவசாயிகள், சுயஉதவிக் குழுவினர் அனைவரும் கிசான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 -75 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி , பஞ்சாப் நேஷனல் வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , பாங்க்ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ போன்ற வங்கிகள் கிசான்கிரெடிட் கார்டை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பலன் பெறும் விதமாக வழங்குகிறது.
கிசான் கிரெடிட்கார்டை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
# ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய புகைப்பட ஆதாரங்கள், நில ஆவணங்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முழுமையாக நிரப்பப்பட்ட KCC விண்ணப்பபடிவம், வங்கிகள் கேட்கும் பிற ஆவணங்களை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
# அதன்பின் எந்த வங்கிகளில் கிசான் கிரெட்கார்டை விண்ணப்பிக்க நினைக்கிறீர்களோ? அவ்வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையபக்கத்திற்கு செல்லவேண்டும்.
# அடுத்ததாக kissan credit cardக்கு விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்துக்கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
# பின் கடன் அதிகாரி உங்களின் படிவத்தை மதிப் பாய்வு செய்ததை அடுத்து கடன் ஒப்புதல் வழங்கப்பட்டதும் அந்த கிரெடிட்கார்டு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிசான் கிரெடிட்கார்டின் நன்மைகள் என்ன?
இந்த கார்டுகளைப் பெற்றுகொள்ளும் விவசாயிகள் விதைகள், விவசாய உப கரணங்கள், உரங்கள், உள்ளிட்டவை வாங்குவதற்கு குறைந்தவட்டியில் வங்கிகளின் வாயிலாக கடன் பெறலாம்.