கிசான் திட்ட மோசடி வழக்கில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் கிசான் திட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 100 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் இருந்து சுமார் 105 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.