கிச்சனில் நீங்கள் பயன்படுத்தும் காய்கறி வெட்டும் கத்தி சீக்கிரம் கூல் மழுங்கி விடுகிறதா? அப்ப இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க.
கிச்சனில் பயன்படுத்தும் கத்திகளை சுத்தமாக கழுவி ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்க வேண்டும். கத்தி கூர்மையாக இல்லாவிட்டால் காய்கறிகளை நறுக்கி முடிப்பதற்குள் மிகவும் சிரமமாக இருக்கும். இதற்காக மாதத்திற்கு ஒரு கத்தி மாத்த முடியாது. கத்தி பராமரிக்கும் முறைகளில் தான் அதன் ஆயுள் தன்மையை இருக்கின்றது. ஷாபிங், ஸ்லைசிங், போனிங்கு போன்ற பல வகையான கத்திகளை நாம் பயன்படுத்துவோம். சமையலுக்கு பயன்படும் தரமான கத்திகளை வாங்குவதோடு மட்டுமல்லாமல் அதை சரியாக பராமரிப்பது அவசியம்.
கத்தியை முறையாக பராமரிப்பது அதை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த நமக்கு உதவும். அதுமட்டும் இல்லாமல் சில நேரங்களில் துருப்பிடித்த கத்திகள் நமது கைகளில் காயத்தை ஏற்படுத்தும். எனவே கத்தியை முறையாக பயன்படுத்துவது மிக முக்கியம். கத்திகளை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். காய்கறி வெட்டிய பிறகு அல்லது பழங்கள், மீன்கள் போன்ற இறைச்சிகளை வெட்டிய பிறகு கத்தியை சுத்தமாக கழுவி துடைத்து வைக்க வேண்டும். ஏனெனில் அவற்றை வெட்டிய பிறகு அவற்றின் எச்சங்கள் அதன் மேலே படிந்தால் அது தேவையற்ற பாக்டீரியாக்களை உருவாக்கும்.
ஸ்க்ரப் நார் போன்ற பாத்திரம் கழுவும் சாதனங்களை கத்தியில் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக சிட்ரஸ் மற்றும் பீச் நிறைந்த சோப்புகளை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இது விரைவில் கத்திகளில் துருவை ஏற்படுத்தும். கத்திகளை கொண்டு காய்கறி பழங்கள் வெட்டும்போது ஷாப்பிங் போர்டு பயன்படுத்துதல் கத்தியின் கூர்மையான பிளேடுகள் அதன் தன்மையை அதிக நாட்கள் இழக்காமல் கூர்மையாக இருக்கும். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவுவதையும் நாம் தவிர்க்க முடியும்.