Categories
சினிமா தமிழ் சினிமா

கிச்சனில் ஜாலியாக சமைக்கும் சிம்பு… ரசிகர்களை கவர்ந்த வீடியோ…!!!

நடிகர் சிம்பு கிச்சனில் சமையல் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு கிச்சனில் ஜாலியாக சமைக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘மஸ்ரூம் பன்னீர் செய்து கொண்டிருக்கிறேன்’ என கூறுகிறார். மேலும் இந்த வீடியோவில் நடிகர் சிம்பு செம ஸ்மார்ட் லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |