இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் பல்வேறு விதமான நகைச்சுவை காட்சிகள் வெளிவந்து மக்களை சிரிக்க வைக்கும் வண்ணம் உள்ளது. பொதுவாக ஒரு இடத்தில் அசம்பாவிதம் நடக்கிறது என்றால் அந்த இடத்தில் நிற்கும் ஒருவர் அவரை காப்பாற்ற நினைப்பார். ஆனால் அதற்கு மாறாக ஒருவர் தன்னை முதலில் காப்பாற்றிக்கொள்ள ஓடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பெண் ஒருவர் சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பின்னர் பின்னால் கணவர் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று கடாயில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட கணவர் மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு ஓடி தூரத்தில் இருந்து தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆகின்றார். சமைக்கும் மனைவி இறந்தால் கூட கவலை இல்லை என்ற எண்ணத்தில் சென்றவரை பார்த்த மனைவி கோபத்தின் உச்சத்திற்கே சென்று தன்னுடைய செருப்பை காலற்றி ஆவேசமாக வருவது அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிரித்து மகிழ்ந்து வருகின்றனர்.
Best husband award goes to… 😂 pic.twitter.com/gtDfNM7ivk
— ٍ (@Gounder_mahan) August 28, 2022