சாலை சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நூதன முறையில் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள மேலகன்னிசேரி பகுதியில் இருந்து பாகனேரி வழியாக நல்லூர் செல்லும் சாலை வரை 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை சீரமைக்கும் பணிகள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஓட்டுநர்கள், பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனையடுத்து சாலை சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மாணவ மாணவ மாணவிகள் பொதுமக்களுடன் இணைந்து அப்பகுதியில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நுதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.