நைட் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியான்டில் கடந்த அரையாண்டில் ரியல் எஸ்டேட் துறை, வீடுகள் விற்பனை, அலுவலகம் மார்க்கெட் நிலவரம் குறித்த அறிக்கை ஒன்றே வெளியிட்டது. அதில் டெல்லியில் மட்டும் வீடு விற்பனை 2.5 மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி ஜூன் அரையாண்டில் டெல்லி என்.சி.ஆர். பகுதியில் 29,101 வீடு விற்பனை ஆகி உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி-ஜூன் அரையாண்டில் 11,474 வீடுகள் விற்பனை ஆகி உள்ளது. எனவே வீடு விற்பனை 2.5 மடங்கு உயர்ந்துள்ளது என்று நைட் இந்தியா தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி-ஜூன் அரையாண்டு போது கொரோனா இரண்டாம் இரண்டாம் நிலை தாக்கம் இருந்ததால் வீடு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வீடு விற்பனை மீண்டும் உயர்ந்துள்ளது. புதிய வீடுகள் அறிமுகப்படுத்தப்படுவதும் உயர்ந்துள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரி-ஜூன் அரையாண்டில் புதிதாக 2,943 வீடுகள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி-ஜூன் அரையாண்டு 28,726 வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடுகளின் விலை 7% உயர்ந்தாலும், டிமாண்ட் அதிகமாக இருந்ததால் வீடு விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது என்று ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்துள்ளனர்.