தைவான் நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தைவான் நாட்டில் நேற்று திடீரென 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இது கடற்கரை நகரங்களில் சராசரி 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது சீனாவிலுள்ள புஜியன் மாகாணத்திலும் உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் தைவானில் கட்டுமான பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.