ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக மேலிடத்தை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அதில்தான் உண்மையை உண்மைகள் அனைத்தையும் கூறுவதாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டணி அமையவே சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஆட்சி மாறிய பின்பு ஏற்கனவே முதல்வர் கூறியிருந்தது போல ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என கூறியதை தற்போது நிறைவேற்றும் விதமாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்பட்டு ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஓ. பன்னீர்செல்வம் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஓபிஎஸ்-க்கு எட்டு முறை ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்தது, அப்போதெல்லாம் அதிமுக ஆட்சி இருந்ததால் ஒருமுறைகூட ஓபிஎஸ் ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தை மதித்து ஆஜராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஓபிஎஸ் அதில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என பதில் அளித்தது ஆணையத்தில் உள்ள அதிகாரிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தனக்கு எதனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் அவரது உடல் நலம் குறித்து எந்த விபரமும் தெரியாது என கூறியுள்ளார்.
அதோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டு தான் இது குறித்து தெரிந்து கொண்டதாகவும் அவர் பதிலளித்துள்ளார். இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதியான இன்று ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் விசாரணை செய்யப்படுவார் என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் எந்த வகையில் பதில் அளிக்கப் போகிறார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆரம்ப காலத்தில் தர்மயுத்தம் நடத்துவதாகவும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அதில் தான் உண்மையை எல்லாம் போட்டு உடைப்பதாகவும் அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.