சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 20 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தண்டியனேந்தல் பகுதியில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வடக்கு புளியம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரத்தினம், தலையாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளியது உறுதியானது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் மணலை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் அள்ளிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.