வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் 24- வது வார்டில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் லட்சுமணன், விநாயகமூர்த்தி, ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.