சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குவலங்காட்டு பகுதியில் அனுமதியின்றி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பரணிதரன் என்பவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் பரணிதரனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரணிதரனிடம் இருந்த 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.