சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் சட்டவிரோதமாக கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள முருகன் என்பவரது கடையில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் முருகன் சட்டவிரோதமாக கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 250 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.