Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. வனத்துறையினரின் விசாரணை…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி நகரில் இருக்கும் ஒரு வீட்டில் சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதனை அடுத்து ஒரு வீட்டில் 35 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள், நாட்டு துப்பாக்கி, கோடாரி, துப்பாக்கி மருந்து ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |