சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த ஆலை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கழுகுமலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அரிசி ஆலைக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது 50 கிலோ எடை கொண்ட 35 மூட்டை ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை தலைமை காவலர் சேர்மனிடம் ஒப்படைத்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரிசி ஆலை உரிமையாளரான பரமசிவம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.