சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஓடுவன்குறிச்சி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான அழகேசன் என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அழகேசன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அழகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.