விதிமுறையை மீறிய 6 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவை- பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி சிகரெட் விற்பனை செய்த 6 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் 1200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.