அதிகாரிகளால் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி அருகில் கணியூர் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சுங்கச்சாவடியின் அருகில் நின்று கொண்டிருந்தபோது தனியார் சொகுசு பேருந்தில் வேனில் வந்த சிலர் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு செல்வ நாகரத்தினம் தலைமையில் ஒரு குழு விரைந்து சென்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரை கண்டவுடன் வேனில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். அதன்பிறகு நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்திலும், வேனிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் பேருந்தில் குட்கா கடத்தியது தெரியவந்துள்ளது. அதன் பின் ஓட்டுனர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்துள்ளது. இவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் இருந்த 553 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான பிற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.