அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்தார்.
அந்த சோதனைகள் அனுமதியின்றி அந்தோணி என்பவர் வீட்டில் வைத்து பட்டாசுகளை தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் அந்தோணியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.