புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விடுதி, மளிகை கடை, பழைய பிளாஸ்டிக் கடைகள் போன்றவற்றில் பதுக்கி வைத்திருந்த 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள 315 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ராஜா, அசர்கனி, அப்துல்ரகுமான், தங்கபாண்டியன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.