சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோனில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.