சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சிங்கம்புணரி நோக்கி சென்ற லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான பிரபாகரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.