புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இச்சடியில் இருக்கும் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது எஸ்.மேலபட்டியில் வசிக்கும் அற்புதசாமி என்பவர் மளிகை சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அற்புதசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.