சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நடுபுணி வழியாக கேரளாவிற்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடுபுணி ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் அந்த நபர் காவல்துறையினர் நிற்பதை பார்த்ததும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதன்பின் காவல்துறையினர் மொபட்டில் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 1 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரேஷன் அரிசி மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மாப்பிள்ளைகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.