சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் காலனி பகுதியில் சுப்புராஜ் என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது.
இதனையடுத்து காவல்துறையினர் சுப்புராஜ் இடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், 22 ஆயிரத்து 500 ரூபாய் பணம், 2 செல்போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்புராஜ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.