புகையிலை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிபட்டு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சௌகத் அலி தலைமையில் ஒரு குழு அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
அப்போது அந்த பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு கடை உரிமையாளர் அஸ்கர் அலி என்பவரையும் கைது செய்தனர்.