Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால்  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து  ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி குடிமைப்பொருள்  குற்றப்புலனாய்வு  அதிகாரி கோபிநாத் தலைமையில் காவல்துறையினர் பாலக்காடு சாலையில் இருக்கும் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை  காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.

இவர்களைக் கண்டவுடன் லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதனையடுத்து  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சட்ட  விரோதமாக  ரேஷன் அரிசி லாரியில் கடத்தியது தெரியவந்துள்ளது. அதன்பின்  1 1/4 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் கேரளாவை சேர்ந்த ஏசுராஜ் என்பது தெரியவந்துள்ளது. இவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |