காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகிலுள்ள துறைபெரும்பாக்கத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த முட்புதர்களின் இடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதைபார்த்த காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 4 1/2 டன் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு இந்த அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.