காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட விரோதமாக ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படிகுடிமைப்பொருள் வழங்கள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் ஒரு குழு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏமப்பூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் 30 சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர்.
அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதில் மொத்தம் 2,000 கிலோ ரேஷன் அரிசி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வண்டிமேடு பகுதியில் வசிக்கும் முபாரக் அலி என்பவர் அரிசியை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.