விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலையில் விதிகளை மீறி இரவு நேரத்தில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட ஆலைக்குள் சென்று பார்த்தனர்.
அங்கு முதலிப்பட்டி சதானந்தபுரம் பகுதியில் வசிக்கும் வரதராஜன்(37) என்பவர் விதிகளை மீறி பட்டாசு தயாரித்தது உறுதியானது. இதனை அடுத்து வரதராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் முழுமையாக தயாரிக்கப்படாத 6 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.