சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற இரண்டரை கோடி மதிப்புள்ள போதைப் பவுடர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து , ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எலக்ட்ரானிக் சமையல் பொருட்கள் பார்சலில் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட போதை பவுடர்கள் சூடபிட்டன் என்ற போதை பொருட்கள் என்பதும், அதன் மதிப்பு இரண்டரை கோடி என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாசல் அனுப்பிய விவேகானந்தன் என்பவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.