பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம். துரைசாமிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் என்பவரது பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று நடத்திய சோதனையில் விக்னேஷ் தனது பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்வது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் விக்னேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.