அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த நிலையில் 1½ லட்சம் ரூபாய் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு நகர் போலீசார் காமராஜர் சிலை அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் ஆட்டோவில் குட்காவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த குட்கா சேலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்த நிலையில் ஆட்டோவில் இருந்த டிரைவர் கிருபானந்தன்(62), ராஜஸ்தானை சேர்ந்த சன்வாலாராம்(27) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் 1½ லட்சம் மதிப்புள்ள குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனர்.