சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பேரையூர் பகுதியில் திடீரென காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேரையூர் கிராமத்தில் ராமர் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
இதனையடுத்து ராமர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைதிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் ராமரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.