அரசு அனுமதியின்று பட்டாசு தயாரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், பிருந்தாதேவி, ரவிராஜ் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்வது உறுதியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த குருநாதன், காளீஸ்வரன், மாரி காலை, கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.