சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வம், ராஜ், பிரவீன், ரோஷன் மற்றும் ரோமி ராஜ் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் சட்ட விரோதமாக கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த பணத்தில் 5 வாலிபர்களும் சொகுசாக தங்களது வாழ்வை கழித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 வாலிபர்களையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.