Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செண்பக கோட்டை கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார்செய்வது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த மாதவன், முனீஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 20 கிலோ மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |