சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோனாகுறிச்சிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த பகுதியில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக பரமசிவம், கலை ராஜா, கண்ணன், வெள்ளைச்சாமி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிப்பர் லாரி மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.