சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக வாலிபர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் பகுதியில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்த சங்கராபுரம் காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பதுக்கி வைத்திருந்த 108 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். அதன்பிறகு சின்னராசுவையும் கைது செய்தனர். இவர் மீது காவல்துறையில் சாராய வழக்குகள் பல நிலுவையில் இருந்தது.
இதனால் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். எனவே மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் சின்னராசுவின் மீது உள்ள குற்றங்கள் பற்றிய அறிக்கையை காண்பித்துள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் அவர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கினார். அதன்பிறகு காவல்துறையினர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சின்னராசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.