Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துப்பேட்டை பகுதியில்   சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக  சிலர் கஞ்சா  விற்பனை செய்தது உறுதியானது.

இதனையடுத்து காவல்துறையினர்  கஞ்சா விற்பனை செய்த பாலமுருகன், முருகானந்தம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 250 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை   பறிமுதல் செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |