சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகில் இருந்து சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகன சோதனை செய்துள்ளனர். அப்போது மூட்டை மூட்டையாக 405 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரக்கு வாகன ஓட்டுனர் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ஜவகர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் ஜவகரை கைது செய்து அவரிடம் இருந்த 45 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.