போதைப்பொருள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேற்கு காவல்துறைக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் ஒரு குழு அலமேலுபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ராஜாராம் என்பவருடைய வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ராஜாராமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.